குளச்சல்:   கடலில் நீர்மூழ்கி கப்பல் மோதி மீனவர் மாயம்

0
158

குளச்சல் அருகே உள்ள கொட்டில் பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெர்மியாஸ் மகன் ஜெனிஸ் மோன் (29) கேரளாவில் விசைப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17ஆம் தேதி ஜெனிஸ் மோன் கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவரின் விசைப்படகில்  மீன்பிடிக்க சென்றார். விசைப்படகை ஜெனிஸ் ஓட்டிச் சென்றார். படகில் 12 பேர் தொழிலுக்கு சென்றனர்.

21- ஆம் தேதி கோவா துறைமுகத்திலிருந்து சுமார் 40 நாட்டிங்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது, படகின் அடிப்பகுதியில் இருந்து திடீரென நீர்மூழ்கி கப்பல் ஒன்று மேலே எழுந்தது.   படகு திடீரென சரிவதை உணர்ந்த மீனவர்கள் கடலில் இருந்து குதித்தனர்.

மறுகணம் கடலில் படகு மூழ்கியது. இதனை பார்த்த நீர்மூழ்கி கப்பல் வீரர்கள் ஐந்து பேரை மீட்டனர். ஆறு பேரை மற்றொரு படகில் வந்த மீனவர்கள் மீட்டனர். ஆனால் ஓட்டுனர் அறையில் இருந்த ஜெனிஸ் மோன்  மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஒரு தொழிலாளியை காணவில்லை. படகு மூழ்கியதில் இரண்டு பேரும் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

 இது குறித்து கொட்டில் பாட்டில் உள்ள ஜெனிஸ் மோன்  உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து கோவா சென்று மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here