குமரி மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் கொல்லங்கோடு நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கொல்லங்கோடு நகர செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வழங்கினார். மாவட்ட உதவி வனத்துறை அதிகாரி பிரசாந்த், பனையோடு உறவாடு புத்தக ஆசிரியர் அன்பையன் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக அவை தலைவர் மரிய சிசுகுமார், பொருளாளர் ததேயுபிரேம் குமார், மீனவர் நல வாரிய உறுப்பினர் நீரோடி ஜோஸ், மாவட்ட பிரதி அப்துல் ரகுமான், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ் உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.