திருவட்டார் அருகே 40 நாள் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை

0
39
திருவட்டார் அருகே 40 நாள் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை
திருவட்டார் அருகே சோகம்: பால் குடித்துவிட்டு தூங்கிய 40 நாள் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு.

திருவட்டார், அருகே உள்ள கண்ணனூர்வாறுவிளையை சேர்ந்தவர் ஜெகன் ஜெபராஜ் (வயது36), பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி ஆட்லின் ஷைனி. இவர்களுக்கு 5 வயது ஒரு மகனும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆல்லின் ஷைனி, பச்சிளம் பெண் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்தார். அத்துடன் கணவன், மனைவியும் அயர்ந்து தூங்கினர். நேற்று காலை 6.30 மணி அளவில் பெண் குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்தது. மேலும் அதன் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் ஜெபராஜும் அவரது மனைவியும் குழந்தையை தூக்கிக் கொண்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதைகேட்டு பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here