இத்தாலி பிரதமர் மெலோனிக்கு சாக்லெட் பரிசளித்த பிரதமர் மோடி – வைரலாகும் வீடியோ

0
31

இத்​தாலி சென்ற பிரதமர் மோடி, அந்​நாட்டு பிரதமர் மெலோனிக்கு மெலோடி சாக்​லெட் பரிசளித்​தார். இது சமூக வலை​தளத்​தில் மீண்​டும் வைரலாகி உள்​ளது.

ஐக்​கிய அரபு அமீரகம், நெதர்​லாந்​து, ஸ்வீடன், நார்வே பயணத்தை முடித்​துக் கொண்ட பிரதமர் மோடி, இறு​தி​யாக செவ்வாய்க்​கிழமை மாலை ரோம் நகர் சென்​றடைந்​தார். அங்கு இத்​தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்​தித்​துப் பேசி​னார். இரு​வரும் இணைந்து இரவு உணவு சாப்​பிட்​டனர். அதைத் தொடர்ந்து உலகப் புகழ்​பெற்ற கொலோ​சி​யம் அரங்​குக்​குச் சென்றனர். இது தொடர்​பான புகைப்​படங்​களை பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்ளார்.

இந்த சந்​திப்​பின்​போது, பிரதமர் மோடி ஜார்​ஜியா மெலோனிக்கு ‘பார்லே மெலோடி’ டாபிகள் (சாக்​லெட்) அடங்​கிய ஒரு பாக்​கெட்​டைப் பரி​சாக வழங்​கி​னார். இதையடுத்​து, மெலோனி எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்​துள்​ளார். இணை​யத்​தில் வைரலாகி வரும் அந்த வீடியோ​வில், ‘‘பிரதமர் மோடி எனக்கு ஒரு மிக மிகச் சிறந்த டாபியைப் பரி​சாகக் கொண்டு வந்​தார் — அது​தான் மெலோடி’’ என்று மெலோனி கூறி​யுள்​ளார். அந்த வீடியோவின் தலைப்​பில், ‘பரிசுக்கு நன்​றி’ என்று குறிப்பிடப்பட்டிருந்​தது.

மோடி மற்​றும் மெலோனி​யின் பெயர்​களின் கலவை​யான மெலோடி என்ற ஹேஷ்டேக், 2023-ம் ஆண்டு துபா​யில் நடை​பெற்ற COP28 மாநாட்​டின்​போது இத்​தாலி பிரதம​ரால் முதன்​முறையாக உரு​வாக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

புதிய வேகம்

பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் மெலோனியும் நேற்று சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்​தி​யா​வுக்​கும் இத்​தாலிக்​கும் இடையிலான உறவு முக்​கிய​மான கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. சமீப ஆண்​டு​களில், எங்​கள் உறவு​கள் முன்​னெப்​போதும் இல்​லாத வேகத்​துடன் விரிவடைந்து வரு​கிறது. வளமான எதிர்காலத்துக்கான தொலைநோக்கு பார்​வையை அடிப்படையாகக் கொண்ட சிறப்​புமிக்க கூட்​டணி உரு​வாகி உள்ளது.

சர்​வ​தேச சூழல் மாற்றங் களை சந்திக்கும் வேளையில், இத்தாலிக்கும் இந்​தி​யா​வுக்​கும் இடையி​லான கூட்​டாண்மை மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. மேலும் இரு நாடு​களின் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள், எரிசக்தி திறன் மேலாண்மை ஆகிய​வற்​றால் 21-ம் நூற்​றாண்​டின் வளமும், பாது​காப்​பும் உறுதி செய்யப்​படும். சர்வதேச அளவில் தொழில் துறை வல்​லர​சாக இத்தாலி வளர்ந்திருக்​கிறது. இத்​தாலி​யின் உற்​பத்​தித் திறன் மற்றும் உலகத்​தரம் வாய்ந்த சூப்பர் கம்ப்​யூட்​டர்​கள் எங்​களது வலிமை​யைப் பறை​சாற்​றுகின்​றன.

மேலும் 100-க்​கும் மேற்​பட்ட அதிக முதலீடு கொண்ட யூனி​கார்ன் நிறு​வனங்​கள் மற்​றும் 2,00,000 ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களைக் கொண்ட இந்​தி​யா​வின் விரை​வான பொருளா​தார வளர்ச்​சி, பொறி​யியல் திறமை, புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் மற்​றும் தொழில் தொடங்க ஏற்ற சூழல் ஆகியவை சர்​வ​தேச அளவில் போற்​றப்​படுகின்​றன. இந்​தி​யா​வும் இத்​தாலி​யும் இணைந்து சக்​தி​வாய்ந்த ஒருங்கிணைப்பை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பிரதமர் மோடிக்கு விருது

உணவுப் பாது​காப்​பு, நிலை​யான விவ​சா​யம் மற்​றும் ஊரக வளர்ச்சி ஆகிய​வற்​றில் ஆற்​றிய பங்​களிப்​பைப் பாராட்​டும் வகையில், பிரதமர் நரேந்​திர மோடிக்கு ஐ.நா. சபை​யின் உணவு மற்​றும் வேளாண்மை அமைப்பு (எப்​ஏஓ) மதிப்​புமிக்க ‘அக்​ரி​கோலா பதக்​கத்​தை’ புதன்​கிழமை வழங்கி கவுர​வித்​தது. ஐந்து நாடுகள் பயணத்தின் இறுதியாக இத்தாலி சென்ற பிரதமர் மோடி, ரோமில் உள்ள எப்ஏஓ தலைமையகத்தில், அதன் தலைமை இயக்குநர் டாக்டர் கியூ டோங்யூவிடமிருந்து இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

பார்லே இண்​டஸ்ட்​ரீஸ் பங்கு விலை உயர்வு

இத்​தாலி பிரதமர் மெலோனிக்கு பிரதமர் மோடி பார்லே மெலோடி சாக்​லெட்டை பரிசளித்த வீடியோ இணை​யத்​தில் வைரலாக பரவிய நிலை​யில், இந்​திய பங்​குச் சந்​தை​யில் பார்லே இண்​டஸ்ட்​ரீஸ் நிறுவன பங்​கு​கள் விலை நேற்று மளமளவென 5% உயர்ந்​தது. இதில் சுவாரஸ்​யம் என்​னவென்​றால், பார்லே சாக்​லெட் பார்லே இண்​டஸ்ட்​ரீஸ் நிறுவன தயாரிப்பு இல்லை என்​பது​தான். அந்த நிறு​வனம் பிஸ்​கெட்​டையோ சாக்​லெட்​டையோ தயாரிக்​க​வில்​லை. அது ஒரு ரியல் எஸ்​டேட் நிறு​வனம் ஆகும். மெலோடி சாக்​லெட் மும்​பையைச் சேர்ந்த பிரபல​மான எப்​எம்​சிஜி நிறு​வனத் தயாரிப்பு ஆகும். இந்​நிறு​வனப் பங்​கு​கள் பங்​குச் சந்​தை​யில்​ பட்​டியலிடப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here