விக்​ரமின் ‘துருவ நட்​சத்​திரம்’ பட வெளியீட்டுக்கு எதி​ரான மனு தள்ளு​படி: ஐகோர்ட் உத்தரவு

0
19

‘துருவ நட்​சத்​திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்​குள் வெளியிட அனு​மதி அளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்த, மேல் முறை​யீட்டு வழக்கை தள்​ளு​படி செய்து சென்னை உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்​கத்​தில் விக்​ரம் நடித்​துள்ள திரைப்படம், ‘துருவ நட்​சத்​திரம்’. நிதிப்​பிரச்னை தொடர்​பாக, பைனான்​சி​யர்​கள் புண்​ணி​யமூர்த்​தி, பிரேம்​ கு​மார் ஆகியோர் தாக்​கல் செய்த வழக்​கில், இப்படத்தை வெளி​யிட கடந்த 2023ம் ஆண்டு சென்னை உயர்​நீ​தி​மன்​றம் தடை விதித்​திருந்​தது.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி செந்​தில்​கு​மார் ராமமூர்த்​தி, ஜூன் 15ம் தேதிக்​குள் படத்தை வெளி​யிட அனு​மதி அளித்​து, கடந்த ஏப்​ரல் மாதம் உத்​தர​விட்​டிருந்தார். அன்​றைய தேதிக்​குள் படத்தை வெளி​யிட இயல​வில்லை என்​றால் கால நீட்​டிப்​புக் கோரி நீதி​மன்​றத்தை நாடலாம் எனவும் உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்த உத்​தரவை எதிர்த்​து, புண்​ணி​ய மூர்த்​தி, பிரேம்​ கு​மார் ஆகியோர் மேல் முறை​யீடு செய்​திருந்​தனர். அந்த மேல்முறையீட்டு மனுவை நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், தில​கவதி அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. ஜூன் 15ம் தேதிக்​குள் படத்தை வெளி​யிட அனு​ம​தி​யளித்த உத்​தரவை எதிர்த்த அவ்வழக்கை தள்ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இதற்​கிடை​யில், படத்தை வெளி​யிடு​வதற்​கான கால அவகாசத்தை ஜூலை 15ம் தேதி வரை நீட்​டிக்​கக் கோரி கவுதம் வாசுதேவ் மேனன் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இந்த மனு மீது ஜூன் 17ம் தேதி உத்தரவு பிறப்பிப்​ப​தாகக்​ கூறி, வி​சா​ரணை​யை தள்​ளிவைத்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here