இலவச திட்டங்களை முறைப்படுத்த கோரி மனு: உச்ச நீதிமன்றத்தில் மார்ச்சில் விசாரணை

0
151

அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை முறைப்​படுத்த வேண்​டும்” என்று கோரி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு மனு​தா​ரர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் முன்​வைத்த வாதத்​தில் கூறிய​தாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்​களுக்கு விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது.

சூரியன், சந்​திரனை தவிர மீத​முள்​ளவை இலவச​மாக வழங்கப்படும் என்று அறி​விப்​பு​கள் வெளி​யிடு​வது முறை​கே​டாகும். மாதம் ரூ.5,000 வழங்​கப்​படும் என்று வாக்​குறுதி தரப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்​டும். எனது மனுவை விரைந்து விசா​ரிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​தா​ரர் அஸ்​வினி உபாத்​யாய் வாதிட்​டார்.

இது குறித்து உச்சநீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறும்போது, “இந்த விவகாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக பொதுநலன் சார்ந்தது. இதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும். வரும் மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here