கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று (1-ம் தேதி) தண்ணீர் திறக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் அமைச்சர் ராஜேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இந்த தண்ணீரை திறந்து வைத்தனர். பாசன கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீரில் ஆட்சியர், அமைச்சர், விவசாயிகள் பூக்களையும் நெல்மணிகளையும் தூவி வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸ்டின், செல்லசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.















