போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்?

0
28

டாஸ்மாக் ஊழியர்​களின் போராட்​டத்தை தொடர்ந்து மண்டல வாரி​யாக மெமோ அனுப்​பப்​பட்டு வரு​வ​தாக​வும், 300க்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் ஊழியர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழ்​நாடு முழு​வதும் காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறும் திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்கு டாஸ்மாக் ஊழியர்​கள் எதிர்ப்​புத் தெரி​வித்து வருகின்றனர்.

இந்​தப் புதிய நடை​முறையை செயல்​படுத்​து​வ​தால் ஏற்​கெனவே உள்ள பணி​களு​டன் கூடு​தல் சுமை ஏற்​படு​வ​தாக ஊழியர்​கள் தெரிவிக்​கின்​றனர். மேலும், காலி மது​பானப் பாட்​டில்​களைத் திரும்​பப் பெறு​வதற்​குத் தனி​யாகப் பணி​யாளர்​களை நியமிக்க வேண்​டும், பாட்​டில்​களை சேகரிப்​ப​தற்​குத் தனி ஏற்​பாடு​களை செய்ய வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, தங்​களது கோரிக்​கைகளை வலி​யுறுத்​தும் வகை​யில் கடந்த நவ.1ம் தேதி தமிழகம் முழு​வதும் பல்​வேறு மாவட்​டங்​களில் டாஸ்​மாக் ஊழியர்​கள் திடீர் வேலைநிறுத்​தத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் ஏராள​மான டாஸ்​மாக் கடைகள் மூடப்​பட்​டன.

இதனிடையே கடைகளை திறக்க மறுத்த மேற்​பார்​வை​யாளர்​கள் மற்​றும் விற்​பனை​யாளர்​களுக்கு டாஸ்​மாக் நிர்​வாகம் நேற்று முன் தினம் மண்டல வாரி​யாக மெமோ அனுப்பி விளக்​கம் கேட்​டது. மேலும், கடையை அடைத்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட160 பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர்.

இதனை தொடர்ந்து நேற்​றைய தின​மும் சென்னை உட்பட பல்​வேறு மாவட்​டங்​களில் டாஸ்​மாக் கடைகள் திறக்​கப்​ப​டா​மல் மூடப்​பட்​டது. 2-வது நாளாக கடைகளை மூடி போராட்​டத்​தில் ஊழியர்​கள் ஈடு​பட்​டனர்.

ஊழியர்​களின் தொடர் போராட்​டம் காரண​மாக, நேற்று மாலை நில​வரப்​படி 798 ஊழியர்​களுக்கு மெமோ வழங்​கப்​பட்​டது டன், 81 பேரை சஸ்​பெண்ட் செய்​துள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

மேலும், தற்​போது வரை கடைகளை அடைத்து போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​வர்​களுக்கு மண்டல வாரி​யாக மெமோக்​கள் அனுப்​பப்​பட்டு வரு​வ​தாக​வும், 300க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டிருக்​கலாம் என தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here