நாகர்கோவிலில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்.

0
354

திருச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய நர்சை சில வாலிபர்கள் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும், இரவு பணியில் ஈடுபடும் செவிலியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம். ஆர். பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் ஜிஜி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், சி. ஐ. டி. யு. இந்திரா, ஹேமலதா, மாநில செயலாளர் சுபின், மாநில பொது செயலாளர் பாலகிருஷ்ணன், அனைத்திந்திய மாதர்சங்கம் மாநில துணை தலைவர் உஷாபாசி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஸ்டிப்னி நன்றி கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here