கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களில் 5 பேர் குடும்பத்துக்கு அரசு வேலை இல்லை

0
16

கரூர் கூட்ட நெரிசலில் 37 குடும்​பங்​களை சேர்ந்த 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், 31 பேரின் குடும்​பங்​களைச் சேர்ந்த தலா ஒரு​வருக்கு அரசு வேலை​யும், ஒரு​வருக்கு ரூ.10 லட்​சம் கருணை தொகை​யும் வழங்​கப்​பட்​டது.

மீதம் உள்ள 5 குடும்​பங்​களில் மனைவி சுகன்​யாவை இழந்த தெய்​வேந்​திரன் காவல்​துறை​யில் பணி​யாற்​று​வ​தா​லும், மற்​றொரு​வர் அரசு பணி​யில் உள்​ள​தா​லும், ஒரு குடும்​பத்​தில் உள்​ளவர்​கள் 60 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் என்​ப​தா​லும், அவர்​களின் குடும்​பங்​களில் யாருக்​கும் அரசு வேலை வழங்​கப்​பட​வில்​லை.

மேலும், ஏமூரை சேர்ந்த காளியப்பன் மனைவி அருக்​காணி கூட்ட நெரிசலில் உயி​ரிழந்த நிலை​யில், அவரது குடும்​பத்​தில் வேலைக்கு செல்​லும் நிலை​யில் 3 பேர் உள்​ள​தால், ஒரு​வருக்கு வேலை வழங்​கி​னால் மற்ற இரு​வர் பாதிக்​கப்​படு​வார்​கள் எனக்​கூறி வேலை வேண்​டாம் என மறுத்​து​விட்​டனர். சேலத்தை சேர்ந்த கிருஷ்ண​மூர்த்தி கோமதி தம்​பதி மகன் ஸ்ரீநாத் உயி​ரிழந்த நிலை​யில் அவரது குடும்​பத்​தில் யாருக்​கும் வேலை வழங்​கப்​ப​டாத​தால் நேற்று அதி​காரி​களை சந்​தித்து முறை​யிட்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here