சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு: ஆர்எஸ்எஸ், இந்துத்துவா ஆட்சிக்கு மிரட்டல்

0
39

காஷ்மீரில் குல்​காம் மாவட்​டத்​தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலுக்கு, ‘பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்​மீர்’ என்ற புதிய அமைப்பு பொறுப்​பேற்​றுள்​ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள மத்​திய ரிசர்வ் காவல் படை (சிஆர்​பிஎப்) சோதனைச் சாவடி​யில் நேற்​றுமுன்​தினம் பைக்​கில் வந்த தீவிர​வாதி​கள் துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் 3 சிஆர்​பிஎப் வீரர்​கள் காயமடைந்​தனர். அவர்​களில் ஒரு​வரது நிலைமை கவலைக்​கிட​மாக உள்​ளது. இந்​தத் தாக்​குதலுக்கு பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்​மீர் என்ற புதிய தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றுள்​ளது.

இது​தொடர்​பாக, அந்த அமைப்​பின் செய்​தித் தொடர்​பாளர் முகமது உமர் அஸ்​ஸாம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “இந்​திய ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் சிஆர்​பிஎப் படையைச் சேர்ந்த இந்​திய ஆக்​கிரமிப்​புப் படை​யினர் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலுக்கு பஸ்தரன்-இ-ஹுரியத் காஷ்​மீர் பொறுப்​பேற்​கிறது.

ஆக்​கிரமிப்பு இந்​துத்​துவ ஆட்​சி​யும், அதன் அமைப்​பு​களும் திணித்​துள்ள ‘செயற்​கை​யான அமைதி’ என்ற முகத்​திரை, முஜாஹிதீன்​களின் நட​வடிக்​கைகளால் மீண்​டும் கிழிக்​கப்​பட உள்​ளது.

வரும் நாட்​களில் இந்​துத்​துவா ஆட்சி மற்​றும் ஆர்​எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேரழிவை ஏற்​படுத்​தும் புதிய தாக்குதல்கள் நடத்​தப்​படும் என எச்​சரிக்​கிறோம். அவர்​களின் ஆதிக்​கம் முடிவுக்கு வரும் வரை இந்​தப் புனித ஜிஹாத் தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here