ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: மே 20-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

0
19

ஆன்​லைன் மருந்து விற்​பனையைத் தடை செய்ய கோரி, மே 20-ம் தேதி நாடு தழு​விய அளவில் மருந்​தகங்​கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

சுமார் 12.4 லட்​சம் மருந்​தகங்​கள் இந்த வேலைநிறுத்​தத்​தில் ஈடுபடக் ​கூடும் என்​ப​தால் நாடு முழு​வதும் மருந்து விநி​யோகம் பாதிக்​கப்​படும் என தெரிகிறது.

இது தொடர்​பாக அகில இந்​திய மருந்தக உரிமை​யாளர்​கள் மற்றும் விற்​பனை​யாளர்​கள் சங்​கம் தெரி​வித்​துள்​ள​தாவது: முறைப்​படுத்​தப்​ப​டாத ஆன்​லைன் மருந்து விற்​பனை​யால் நோயாளி​களின் பாது​காப்​புக் குப் பெரும் அச்​சுறுத்​தல் ஏற்பட்டுள்ளது. முறை​யான சரி​பார்ப்பு இன்றி மருந்​துகள் விநியோகிக்​கப்​படு​வ​தால், ஒரே மருந்​துச் சீட்​டைப் பலமுறை பயன்​படுத்தும் அவல நிலை காணப்​படு​கிறது.

ஆன்​டிப​யாடிக், போதை தரக்​கூடிய மருந்​துகள் தடை​யின்றி கிடைப்​ப​தற்கு வழி​வகுக்​கிறது. செயற்கை நுண்​ணறிவு மூலம் உரு​வாக்​கப்​பட்ட போலி மருந்​துச் சீட்​டு​களைப் பயன்​படுத்தி மருந்​துகள் விற்​பனை செய்​யப்​படு​வ​தால், மருந்து எதிர்ப்புத்திறன் (ஏஎம்​ஆர்) அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது.

மேலும், கரோனா காலத்​தில் நடை​முறைப்​படுத்​தப்​பட்ட தற்காலிகத் தளர்​வு​களைப் பயன்​படுத்​தி, ஆன்​லைன் நிறுவனங்கள் மருந்து விதி​களை மீறி வரு​கின்​றன. எனவே, மின்​-மருந்​தகச் செயல்​பாடு​கள் தொடர்​பான அரசாணை​களை மத்திய அரசு உடனடி​யாகத் திரும்​பப் பெற வேண்​டும்.

மருந்​தகங்​களின் வாழ்​வா​தா​ரம் கேள்விக்​குறி​யாகி உள்​ளது. இந்தத் தொழிலை நம்​பி​யுள்ள சுமார் 5 கோடி மக்​களின் வாழ்வாதா​ர​மும் இதனால் பாதிக்​கப்​படும். மே 20-ம் தேதிக்​குள் உரிய நடவடிக்கை எடுக்​கப்​ப​டா​விட்​டால், போராட்​டம் தீவிரப்படுத்​தப்​படும். மே 20 அன்று வேலைநிறுத்​தம் நடைபெற்றாலும், அவசர கால மருந்​துகள் தடை​யின்றி கிடைக்கப் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு ஏஐஓசிடி தெரிவித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here