மார்த்தாண்டம்: குளத்தின் கரை உடைப்பு; கும்பல் மீது வழக்கு

0
197

சிராயன்குழி பகுதியில் உள்ள பம்மக்குளம் குளத்தின் கரையை சிலர் சேதப்படுத்தியதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்துள்ளது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது, பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தின் கரை இடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் மகன் ராஜன் தலைமையிலான கும்பல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here