மார்த்தாண்டம் வடக்கு தெரு பகுதி முள்ளுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் லாரன்ஸ் (66). முன்னாள் ராணுவவீரர். இவரது மகன் ஷெர்லின் ஜீன்ஸ் (35). ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது வீட்டில் இருந்து வேலை பார்த்து வரும் நிலையில், ஷெர்லின் ஜீன்ஸ் சம்பவ தினம் இரவு அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்ட அவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து லாரன்ஸ் தனது மகனை பல இடங்களில் தேடினார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நேற்று (24-ம் தேதி) மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.