கருங்கல் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாம் டேனியல் ராஜ் (37). கொத்தனார். இவரிடம் இருந்து பாலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார், சுரேஷ்குமார் (33) என்பவர் 5 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க சாம் டேனியல் ராஜ் என்பவர் சுரேஷ்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார். இது சுரேஷ்குமாரின் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சாம் டேனியல் தலையில் சுரேஷ்குமார் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த சாம் டேனியல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (25-ம் தேதி) மாலையில் சாம் டேனியல் ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.