மார்த்தாண்டம் நகர பகுதி வழியாக கேரளாவுக்கு ஏராளம் கனரக லாரிகள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இன்று 5-ம் தேதி காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் பழைய தியேட்டர் சந்திப்பில் சென்று கொண்டிருந்த கனிம வள லாரியின் முன்பக்க டயர் திடீரென எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் லாரி அங்கும் இங்குமாக அலைந்து சென்றது. இது காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பயத்துடன் அங்கும் இங்குமாக ஓடினர். ஆனால் டிரைவர் சாதுரியமாக செயல்பட்டு சாலையின் இடது பக்கமாக லாரியை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையோரத்தில் மணிக்கணக்கில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் பஞ்சர் சரிசெய்யும் வாகனத்தை அழைத்து லாரி எடுத்துச் சென்றனர்.
ஏற்கனவே மார்த்தாண்ட நகர பகுதிக்குள் கனரக வாகனங்கள் அனுமதிக்கக் கூடாது என்று வர்த்தகர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்திய பின்பும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.