கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அக்கா குட்கா, புகையிலைப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள். தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்க கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்.