கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜாவுக்கு, இடையன்விளை மீன் மார்க்கெட் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு ரோந்து சுற்றி வந்தபோது ஐயப்பன்(39) என்பவர் புகையிலை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா கைது செய்தார். தொடர்ந்து, நேற்று (ஜனவரி 4) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.