களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே மணிவிளை பகுதியில் உள்ள பம்பு செட்டுகளில் மின் மோட்டார்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பளுகல் போலீசில் புகார் செய்தனர். இதனை அடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் மணிவிளை புரவூர் பகுதி சேர்ந்த பிரமோத் (45), என்பவர் மின்மோட்டார்களை திருடியது தெரிய வந்தது.
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் பிரமோத்தை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கேரள மாநிலம் நிலமூடு பகுதியில் மனைவியுடன் சேர்ந்து மின் மோட்டார்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நேற்று (5-ம் தேதி) பளுகல் போலீசார் பிரமோத்தை கைது செய்து மூன்று மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். அவரை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.