
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பாலத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டு விபத்தில் காயமடைந்தார். அருகிலுள்ள லைப் கேர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து உறவினர்கள் அடையாளம் கண்டு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.













