குமரி – தாரகை கத்பர்ட் எம். எல். ஏ-க்கு வரவேற்பு

0
44

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் கன்னி பேச்சை பேசிவிட்டு குமரி மாவட்டம் வருகை தந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் -க்கு தமிழக -கேரளா எல்லையான களியக்காவிளையில் காங்கிரசார் செண்டை , சிங்காரி மேளங்கள் முழங்க ரோஜா பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தாரகை கத்பர்ட் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்க கூடாத துயரமான சம்பவம் காங்கிரஸ் , கூட்டணி கட்சிகள் மற்றும் முதல்வர் உட்பட அனைவரும் துயரமான சம்பவமாக தான் பார்கிறார்கள்,
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெளிவாக கூறி இருக்கிறார் , அதிமுக ஆட்சியிலும் அங்கு கள்ளசாராயம் காய்ச்சி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார் காங்கிரஸ் கொள்கை பூரண மதுவிலக்கு ஆனால் , அரசு உடனடியாக மதுவிலக்கை கொண்டுவந்தால் பக்கத்தில் இருக்கும் கேரளாவில் போய் மது பிரியர்கள் வாங்குவார்கள்,

அண்ணாமலை சொல்வதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா கிங்பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டிற்கு தப்பிக்க வைத்தது , யார் பாஜக இதில் இருந்து மது- வை ஆதரிப்பது மத்திய அரசா மாநில அரசா என்பதை நீங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள் ,

கனிமொழி கூறியது போல படிபடியாக மது விலக்கு கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் இளம் விதவைகள் எண்ணிக்கை குறையும் , இவ்வாறு அவர் பேசினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here