விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் கருவி

0
95

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் உள்ள சேக்ரட் ஹார்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் 7- ம் வகுப்பு படித்து வருபவர் கிறிஸ்பின் ஜேடன் (12), வன விலங்குகளிடம் இருந்து பழங்குடியின மக்களை பாதுகாக்க இயந்திரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர் பல்வேறு இயந்திரங்களை உருவாக்கி உள்ளனர். அவை அனைத்தும் பயன் அளிக்காமல் போக இறுதியாக வனவிலங்குகள் பட்டாசு சத்தம் மற்றும் தீ உள்ளிட்டவைகளுக்கு பயப்படும் , என்பதை உணர்ந்த சிறுவன் தனது தாய் தந்தையர் மற்றும் ஆசிரியர்கள் உதவியோடு அதிக சத்தம் மற்றும் தீ போன்ற ஒளி உருவாகக்கூடிய ஒரு இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளார். இதற்க்காக லேசர் விளக்குகள் லவுடு ஸ்பீக்கர் முதலிய எளிய உபகரணங்கள் கொண்டு எளிதில் இயங்கக்கூடிய இந்த உபகரணத்தை கொண்டு தனது வீட்டை சுற்றிலும் சுற்றி திரியும் நாய் உள்ளிட்டவற்றை விரட்டி சோதனை செய்தபோது அவைகள் மிரண்டு ஓடி உள்ளன , இதனையடுத்து இந்த இயந்திரம் வன விலங்குகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க உகந்தது என்பதை உணர்ந்து அதற்கான காப்புரிமை பெற முயன்று , தற்போது அதற்கான காப்புரிமையையும் வாங்கியுள்ளனர். சுமார் 6 ஆயிரம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம் வரும் நாட்களில் அனைவரும் வாங்கி பயன்பெறும் வகையில் குறைந்த விலையில் கிடைக்க திட்டமிட்டுள்ளார்