குமரி: தடையை மீறிய 9 கனிமவள லாரிகள் பறிமுதல்

0
28

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வள லாரிகள் செல்வதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. தடை விதித்துள்ளனர். புதுக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 4 வழி சாலை பகுதியில் இன்று 7-ம் தேதி வாகன சோதனை நடைபெற்றபோது, தடையை மீறி கேரளா செல்ல முயன்ற 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காளியக்கவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மேலும் 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகன சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here