குமரி: போதையில் கஞ்சா புகைத்த 13 மாணவர்கள் கைது

0
325

பள்ளியாடியில் நேற்று ஒரு வீட்டை பூட்டி, கும்பலாக கஞ்சா புகைப்பதாக மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு கிடைத்த தகவலின் பேரில், தக்கலை தனிப்படை போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மது போதையில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இரண்டு பேர் 15 மற்றும் 18 வயதுடைய சிறுவர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கஞ்சா இவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here