குழித்துறை: இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு

0
269

குழித்துறை பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் ஆஷில் ஷாம் ஹல்ஸ் என்ற பிரின்ஸ். இவரிடமிருந்து வடிவீஸ்வரம் பகுதி சீதன் (22) என்பவர் சொகுசு காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். இந்த கார் விபத்துக்குள்ளாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரதீப், ஆஷில் ஷாம் ஹல்ஸ் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து சீதன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள், 3 செல்போன்கள், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனராம். களியக்காவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, ஆஷில் ஷாம் ஹல்ஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here