கொல்லங்கோடு: தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

0
159

கொல்லங்கோடு, பனவிளை பகுதியை சேர்ந்த 51 வயதான தொழிலாளி விஜயன், மதுப்பழக்கத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்றவர், மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து பார்த்தபோது, அவர் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து விஜயனின் மனைவி உஷா அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here