பூத்துறை பகுதியில் இருந்து பயணிகள் ஆட்டோ ஒன்றில் படகுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெயை கடத்துவதாக கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு சுமார் பத்து மணி அளவில் போலீசார் துரத்தி சென்று இளம்பாலமுக்கு பகுதியில் பிடித்தனர். ஆட்டோவில் 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 கேன்களில் 600 லிட்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோ, மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவர் டேனியல் மற்றும் டின்று ஆகிய இரண்டு பேரை பிடித்து போலீசார் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.