கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கீழ்மிடாலம் A, மிடாலம் B, இனயம் புத்தன்துறை, ஏழுதேசம் A, B, C, கொல்லங்கோடு A, B ஆகிய வருவாய் கிராமங்களிலும், கல்குளம் தாலுகா சைமன்காலனி வருவாய் கிராமத்திலும் அதைத்தொட்ட இரண்டு கிலோ மீட்டர் உள்நாட்டுப் பகுதிகளிலும் 114406.18 ஹெக்டேர் நிலங்களில் கனிம மணல் அள்ள மத்திய-மாநில அரசுகள் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலைக்கு (IREL) வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கேட்டு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மக்கள் எதிர்ப்பை மீறி கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலைக்கு (IREL) கனிம மணல் அள்ள ஒருபோதும் அனுமதி கொடுக்கமாட்டோம் என்று உறுதி அளித்தார்.