முளகுமூடு தேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ (27). இவர் கப்பியறை பகுதி வேளாங்கோடு என்ற இடத்தில் பைப் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பிடல் காஸ்ட்ரோ கருங்கல் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், – முளகுமூடு பகுதியைச் சேர்ந்த அனிஷா (35) என்பவர் கடை வைத்திருப்பதாகக் கூறி அடிக்கடி தனது கடையில் இருந்து பொருட்கள் வாங்கி வந்ததாகவும், அந்த பழக்கத்தில் சம்பவ தினம் ரூ. 8 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிற்கான ஜிஐ பைப் வாங்கியுள்ளார்.
சிறிது பணத்தைக் கொடுத்து விட்டு மீதி ரூ. 8 லட்சத்தைப் பின்னர் தருவதாகக் கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்களையும் பணம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் அனிஷா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.