காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு

0
14

தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு 4 ஆயிரம் கன அடி நீரைதிறக்க உத்​தர​விட்ட காவிரி மேலாண்மை ஆணைய உத்​தர​வுக்கு எதி​ராக உச்ச நீதி மன்றத்தில் மேல்​முறை​யீடு செய்ய கர்​நாடக அரசு முடி​வெடுத்​துள்​ளது. கர்​நாட​கா​வில் நிகழாண்​டில் பருவ மழை பொய்த்​த​தால் காவிரி நதி நீர் பங்​கீட்டு விவ​காரத்​தில் கர்​நாடகா​வுக்​கும் தமிழகத்​துக்​கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கர்​நாடக அரசுக்கு பரிந்​துரை

இந்​நிலை​யில் நேற்று முன் தினம் நடை​பெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்​டத்​தில், தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க கர்​நாடக அரசுக்கு பரிந்துரை செய்​த‌து. இந்த உத்​தர​வுக்கு கர்​நாட​கா​வில் கன்னட அமைப்​பினரும் விவ​சாய சங்​கத்​தினரும் கடும் கண்டனம் தெரிவித்​தனர்.

இதனை கண்​டித்து நேற்று மைசூரு, மண்​டி​யா, பெங்​களூரு ஆகிய இடங்​களில் கன்னட அமைப்​பினரும் விவ​சாய சங்​கத்​தினரும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்த நிலை​யில், கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று பெங்​களூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், ‘‘காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் உத்​தரவை அமல்​படுத்த முடி​யாத நிலை​யில் இருக்​கிறோம். கர்​நாடக அணை​களில் போதிய அளவுக்கு நீர் இல்​லை. வறட்சி காரண​மாக கர்​நாடக விவசாயிகளுக்கு நீர் திறக்க முடி​யாத நிலை​யில் இருக்​கிறோம். இந்த உத்​தரவை எதிர்த்து சட்ட நிபுணர்​களு​டன் ஆலோசித்து உச்ச நீ​தி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய இருக்​கிறோம்​” என்றார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here