தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி நீரைதிறக்க உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகாவில் நிகழாண்டில் பருவ மழை பொய்த்ததால் காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசுக்கு பரிந்துரை
இந்நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு 4 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறக்க கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த உத்தரவுக்கு கர்நாடகாவில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நேற்று மைசூரு, மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் கன்னட அமைப்பினரும் விவசாய சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. வறட்சி காரணமாக கர்நாடக விவசாயிகளுக்கு நீர் திறக்க முடியாத நிலையில் இருக்கிறோம். இந்த உத்தரவை எதிர்த்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்” என்றார்.
