Home தேசிய செய்திகள் நாடு முழுவதும் கைப்பேசி திருட்டு அதிகரிப்பு: 63.68 லட்சம் முடக்கம்; மீட்பில் தமிழ்நாடு 7-வது இடம்

நாடு முழுவதும் கைப்பேசி திருட்டு அதிகரிப்பு: 63.68 லட்சம் முடக்கம்; மீட்பில் தமிழ்நாடு 7-வது இடம்

0

மத்திய தொலைத்தொடர்புத் துறை​யின் இணையதளத் தரவு​களின்​படி, நடப்பு ஆண்​டில் நாடு முழு​வதிலும் திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களுக்​காக முடக்​கப்​பட்ட கைப்பேசிகள் 63.68 லட்​சம். இவற்​றில் திருடப்​பட்டு கண்டறியப்பட்​டவை 39.34 லட்​சம். தொலைந்​துபோன, திருடப்பட்ட என இரு வகை கைப்​பேசிகளை​யும் மத்​திய தொலைத்​தொடர்​புத் துறை​யின் சிஇஐஆர் (CEIR) மூலம் முடக்க முடியும். எனவே, முடக்​கப்​பட்ட அனைத்​துக் கைப்​பேசிகளை​யும் திருடப்​பட்​டவை என்று கருத முடி​யாது.

முடக்​கப்​பட்ட கைப்​பேசிகள் பட்​டியலில் முதல் 3 இடங்​களில் டெல்லி-என்​சிஆர் (10,92,105), மகாராஷ்டிரா (7,74,644), கர்​நாடகா (6,25,403) ஆகியவை உள்​ளன. அடுத்து உத்​தர பிரதேசம் (5,93,830), தெலங்​கானா (5,75,138), மேற்கு வங்​கம் (3,10,564) ஆகிய​வற்​றுக்​குப் பின் 7-வது இடத்​தில் தமிழ்​நாடு (2,96,962) உள்​ளது. இதன் பிறகு மத்​தி​யப் பிரதேசம் (2,76,543), ஆந்​திரா (2,47,444), குஜராத் (2,43,356), ராஜஸ்​தான் (2,16,006) ஆகியவை உள்​ளன.

திருடப்​பட்​டும் காணா​மல் போயும் மீட்​கப்​பட்ட கைப்​பேசிகளில், ஒரு லட்​சத்​துக்கு மேல் முடக்​கப்​பட்ட மாநிலங்​களில் ஆந்​திரா 58.14 சதவீதத்​துடன் முதலிடத்​தில் உள்​ளது. அடுத்த நிலை​யில் குஜராத் (50.76), உத்​தரப் பிரதேசம் (50.19), கர்​நாடகா (49.02), ராஜஸ்​தான் (48.54), தெலங்​கானா (44.85) ஆகியவை உள்​ளன. தமிழ்​நாடு (43.42) 7-வது இடத்​திலும், கடைசி இடத்​தில் டெல்லி (8.49) உள்​ளன.

காணா​மலும் திருடப்​பட்​டுப் போகும் கைப்​பேசிகள் குறித்த தடயங்​கள் கிடைத்த பிறகும், காவல்​ துறை​யின​ரால் பாதிக்​கும் குறைவாக, அதாவது 37.69 சதவீதக் கைப்​பேசிகளை மட்​டுமே மீட்க முடி​கிறது. கைப்​பேசி திருடப்​படும்​போது, பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் காவல் நிலை​யத்​தில் ‘தொலைந்​து​விட்​டது’ என்றே புகார் அளிக்​கின்​றனர்; ‘திருடப்​பட்​டது’ என்று பதிவாவதில்லை. காவல் துறையினர் கைப்பேசிகளை மீட்கவும் திருடியவர்களைப் பிடிக்கவும் போதிய முயற்சி செய்​வதில்லை. இ​தற்​கான செலவு கூடுதலாக இருக்கும் என்பதால் அந்த முயற்சி கைவிடப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version