Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது

கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது

0

கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ விடமாட்டான்.” என்று வீடியோ மூலம் தகவலை அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்….

த.வெ.க. பிரமுகர் கைது செய்து சிறையில் அடைப்பு: போலீசார் விசாரணையில் அனிஷா வீடியோ தகவலில் குறிப்பிட்ட நபர், த.வெ.க. பிரமுகர் சங்கர் என்று தெரியவந்தது. சென்னை பல்லாவரத்தில் நண்பர் வீட்டில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நேற்று அவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version