Home கன்னியாகுமரி செய்திகள் குப்பைகள் தரம்பிரித்தல்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குப்பைகள் தரம்பிரித்தல்: நாகா்கோவிலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

0

நாகா்கோவில் மாநகராட்சி சாா்பில், வீட்டுக் குப்பைகளைத் தரம் பிரித்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சரலூா் கைப்பந்து மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்படும் ‘மலரும் மொட்டுக்கள்‘ கூட்டமைப்பைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா கலந்து கொண்டு, வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாகத் தரம் பிரித்து வழங்குவதன் அவசியம் மற்றும் மாநகரை தூய்மையாகப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

மேலும், மாநகராட்சி நுண் உரம் செயலாக்க மையத்தில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கினாா். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலா் ராஜா, மாமன்ற உறுப்பினா் ரமேஷ் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version