Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில் வாத்தியார் விளை பகுதியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில்ஆய்வு!

நாகர்கோவில் வாத்தியார் விளை பகுதியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில்ஆய்வு!

0

நாகர்கோவில்: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வாத்தியார் விளை மின்கடை சந்திப்பில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று வடிகால்களின் நிலை மற்றும் மழைநீர் வெளியேறும் பாதைகளை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வடிகால்களில் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றித் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆஸ்டின், மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில்ஆய்வு!

மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மழைநீர் தடையின்றி வெளியேறவும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாநகராட்சிப் பகுதிகளில் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version