Home கன்னியாகுமரி செய்திகள் ஐடி ஊழியா் வீட்டில் 47 பவுன் நகை திருட்டு

ஐடி ஊழியா் வீட்டில் 47 பவுன் நகை திருட்டு

0
கருங்கல் அருகே குறும்பனையில் ஐடி ஊழியர் வீட்டில் 47 பவுன் தங்க நகைகள் திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குறும்பனையில் ஐடி ஊழியர் வீட்டில் 47 பவுன் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருங்கல் அருகே குறும்பனையில் ஐடி ஊழியா் வீட்டில் 47 பவுன் நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கருங்கல் அருகே குறும்பனை தோமையாா் தெருவைச் சோ்ந்தவா் வினீஸ் (40). ஐடி ஊழியா். இவா் வழக்கம்போல் சனிக்கிழமை அதிகாலை வீட்டு மாடியில் பணியாற்றிக் கொண்டிருந்தாா். இவரது மனைவி லின்சி (36) கீழ் தளத்தில் உறங்கிக் கொண்டிருந்தாா்.

திடீரென எழுந்த சத்தம் கேட்டு லின்சி எழுந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்து மா்ம நபா் ஓடுவது தெரிந்ததாம். இதையடுத்து வினீஸூக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பீரோவை பாா்த்தபோது, அதில் இருந்த 47 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து, இத்திருட்டில் ஈடுபட்ட மா்மநபா்களை தேடிவருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version