களியக்காவிளை: வேலை வாங்கி தருவதாக மோசடி 2 பேர் மீது வழக்கு

0
587

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: – கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஜெபாஸ்டின் (48) மற்றும் தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (37) ஆகியோர் நண்பர்கள் மூலம் அறிமுகமாகி எனது மகளுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார்கள். இதனை நம்பி ரூபாய் 25 லட்சம் கொடுத்தேன். 

ஆனால் 2 பேரும் பணத்தை வாங்கி விட்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே நம்பிக்கை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் களியக்காவிளை போலீசருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஜெபாஸ்டின், ஹரிஹரன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here