இரணியல்:   பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

0
90

இரணியல் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மனைவி சியாமளா (65). கடந்த 22ஆம் தேதி கணவருடன் பைக்கில் செல்லும்போது திடீரென பைக் பஞ்சர் ஆனதாகத் தெரிகிறது. இதில் பைக் நிலைதடுமாறி, பின்னால் அமர்ந்திருந்த சியாமளா தவறி கீழே விழுந்து, அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சியாமளா சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சியாமளா பரிதாபமாக உயிரிழந்தார். இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here