கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (65) இவரது மகன் நிகேஷ் துணை ராணுவ படை வீரர். டெல்லியில் பிரதமர் இல்லம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதனால் அவர் மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார். மனோகரன் நேற்று (ஜன.17) தனது சகோதரி மற்றும் கணவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குடும்பத்துடன் காரில் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றனர். திங்கள்சந்தை பகுதியில் பொங்கல் விழாவிற்காக தோரணம் கட்டி இருந்த கொடி கார் டயரில் சிக்கியதாக தெரிகிறது. அப்போது அவரிடம் ஒரு கும்பல் வந்து அவதூறு பேசி தகராறு செய்துள்ளது. இதில் கும்பலில் ஒருவர் மனோகரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து காரில் இருந்த உறவினர்கள் தடுத்தும் தொடர்ந்து தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் படுகாயமடைந்த மனோகருக்கு கண் குறைபாடு ஏற்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே மனோகரன் டெல்லியில் உள்ள தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார். நிகேஷ் இது குறித்து மாவட்ட எஸ்பி மற்றும் இரணியல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இரணியல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.