100% மின்மயமாக்கலை நெருங்கும் இந்திய ரயில்வே – இன்னும் 269 கி.மீ. மட்டுமே நிலுவை

0
29

இந்​திய ரயில்வே அகல ரயில் பாதைகளை முழுமையாக மின்​மய​மாக்​க இலக்​கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நாட்​டின் அகல ரயில் பாதை​யில் 99.6% ஏற்​கெனவே மின்​மய​மாக்​கப்​பட்டு விட்​ட​தாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்​ளது.

மொத்​த​முள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதை​யில் 2026 மே 31ம் தேதி நில​வரப்​படி 70,002 கி.மீ. மின்​மய​மாக்​கப்​பட்​டுள்​ளது. இந்தியா​வில் ரயில் ​பாதை மின்​மய​மாக்​கல் கடந்த 1925-ல் தொடங்​கியது. நாட்​டின் முதல் மின்​சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்​பில், மகா​ராஷ்டி​ரா​வின் மும்பை விக்​டோரியா டெர்மினஸ் மற்​றும் குர்லா ஹார்​பர் இடையே இயக்​கப்​பட்​டது.

ரயில்வே அமைச்​சகத்​தின் சமீபத்​திய தகவலின்​படி, 25 மாநிலங்கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​கள் தங்​கள் அகல ரயில்பாதை​யில் 100% மின்​மய​மாக்​கலை எட்​டி​யுள்​ளன. ராஜஸ்தான், தமிழ்​நாடு, அசாம், கர்​நாட​கா, கோவா ஆகிய 5 மாநிலங்​களில் இன்னும் 269 கி.மீ. வழித்​தடம் மட்​டுமே மின்மயமாக்​கல் பணி​யின் கீழ் உள்ளன. இவை தவிர, புதிய பாதைகள் மற்​றும் பல வழித்தட திட்டங்​கள் அனைத்​தும் தற்போது மின்​மய​மாக்​கலுடன் சேர்த்தே அனு​மதி அளிக்​கப்​பட்​டு, கட்​டமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here