‘இங்கிலாந்துக்கு இந்திய அணி சவால் அளிக்கும்’ – சொல்கிறார் மைக்கேல் கிளார்க்

0
62

இந்​திய அணி, இங்​கிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட​வுள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்​டிங்​லி​யில் தொடங்​க​வுள்​ளது.

இதுகுறித்து ஆஸ்​திரேலிய அணி​யின் முன்​னாள் கேப்​டன் மைக்​கேல் கிளார்க் கூறிய​தாவது: தற்​போது இங்​கிலாந்து சென்​றுள்ள அணி​யில் அனுபவம் மிகுந்த வீரர்​களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இல்​லை. அவர்​கள் ஓய்வு பெற்​று​விட்​டனர். அணி​யில் இடம்​பெற்​றுள்ள பெரும்​பாலான வீரர்​கள் குறைந்த அளவு டெஸ்ட் போட்​டி​யில் விளை​யாடிய​வர்​களாகவே உள்​ளனர்.

அதே நேரத்​தில் பந்​து​வீச்​சில் எதிரணியை நிலைகுலை​யச் செய்​யும் வீரர் ஜஸ்​பிரீத் பும்ரா இருக்​கிறார். அவர் அங்கே எப்​படி செயல்​படப் போகிறார் என்​ப​தைப் பார்க்​க வேண்​டும்.

அணி​யில் இளம் வீரர்​கள் அடங்​கி​யிருக்​கின்​றனர். எனவே, இங்​கிலாந்​துக்கு இந்​திய அணி நிச்​ச​யம் சவால் அளிக்​கும்.

சாய் சுதர்​ஷன், நிதிஷ் குமார் ரெட்​டி, யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், அர்​ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சிறப்பாக செயல்படுவர். இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here