பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு இந்தியா காரணம் அல்ல: தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு விளக்கம்

0
23

பாகிஸ்தான் பாது​காப்​புப் படைகள் மீது நாங்கள் தாக்​குதல் நடத்​து​வதற்​கும் இந்​தி​யா​வுக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்லை என்று தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத அமைப்பு விளக்​கம் அளித்​துள்​ளது.

எல்லை தாண்​டிய தீவிர​வாதம் தொடர்​பாக பாகிஸ்​தானுக்​கும் ஆப்கானிஸ்தானுக்​கும் இடையே பதற்​றம் நீடித்து வரு​கிறது. இந்த சூழலில் டிடிபி அமைப்​பின் முக்​கிய தலை​வ​ரான முஃப்தி கஃப்ரான் கூறி​யிருப்​ப​தாவது: ஆப்​கானிஸ்​தானில் இருந்து டிடிபி அமைப்​பினர் எல்லை தாண்டி வந்து எங்​கள் படை​யினர் மீது தாக்குதல் நடத்​துகின்​றனர் என பாகிஸ்​தான் குற்​றம் சாட்டி வருகிறது. இது முற்​றி​லும் நிராகரிக்​கத்​தக்​கது.

குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பான உறு​தி​யான ஆதா​ரங்​களை பாகிஸ்​தான் அரசும், ராணுவ​மும் இது​வரை வெளி​யிட​வில்​லை. எங்​கள் அமைப்​பின் ராணுவ மற்​றும் நிர்​வாக கட்​டமைப்​பு​கள் அனைத்​தும் பாகிஸ்​தான் எல்​லைக்​குள்​ளேயே அமைந்​துள்​ளன. அங்​கு​தான் இயங்கி வரு​கிறோம். எங்​கள் அமைப்​புக்கு பாகிஸ்தானில் குறைந்​த​பட்​சம் 39 மாவட்​டங்​களில் கட்​டமைப்பு வசதி​கள் உள்​ளன. இதில் மிகக் குறைந்த அளவி​லான அமைப்புகளே ஆப்​கானிஸ்​தான்​-​பாகிஸ்​தான் எல்​லைக்கு அருகே அமைந்​துள்​ளன.

பஞ்​சாப், சிந்​து, பலுசிஸ்​தான் மற்​றும் கைபர் பக்​துன்க்வா உள்ளிட்ட பாகிஸ்​தானின் பல்​வேறு பகு​தி​களில் டிடிபி இயங்கி வரு​கிறது. இந்த இடங்​கள் எல்​லைப் பகு​தியி​லிருந்து நூற்​றுக்​கணக்​கான கிலோமீட்​டர் தொலை​வில் உள்​ளன. சமீபத்​தில் ஹாங்கு பகு​தி​யில் சண்டை நடை​பெற்​றது. பாகிஸ்​தான் ராணுவ வீரர்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​திய அந்​தப் பகுதி ஆப்கானிஸ்தான் எல்​லைக்கு அரு​கில் இல்​லை.

மேலும், பாகிஸ்​தான் தனது எல்​லைப் பகு​தி​யில் முள்​வேலித் தடுப்பு​கள், கண்​காணிப்​புச் சாவடிகள், எச்​சிரிக்கை அமைப்புகள், விளக்​கு​கள் மற்​றும் நிலக்​கண்ணி வெடிகளை அமைத்து பலப்​படுத்​தி​யுள்ள நிலை​யில், எங்​களால் எப்​படி தொடர்ந்து எல்​லை​யைக் கடந்து வர முடி​யும்.

மேலும், இந்​திய அரசு டிடிபி அமைப்​புக்கு ஆதரவு அளிப்​ப​தாக பாகிஸ்​தான் கூறிவரும் குற்​றச்​சாட்​டு​களும் முற்​றி​லும் புறந்​தள்ளக்​கூடியது. எதிரி​களுக்கு எதி​ராகப் பாகிஸ்​தான் காலம் காலமாகப் பரப்பி வரும் பொய்ப் பிரச்​சா​ரத்​தின் ஒரு பகு​தியே இந்தக் குற்​றச்​சாட்​டு. எங்​கள் அமைப்​பின் நடவடிக்​கைகள் அனைத்​தும் சுய​சார்​பான நிதி​யுதவி மற்​றும் திட்​ட​மிடலின் மூலமே நடை​பெறுகின்​றன. இவ்​வாறு முஃப்தி கஃப்​ரான்​ கூறியுள்ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here