“எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்ஸர், பவுண்டரி​களை என்னால் விளாச முடி​யும்” – மனம் திறக்​கிறார் வைபவ் சூர்யவன்ஷி

0
24

எப்​போது வேண்​டு​மா​னாலும் 3 சிக்​ஸர், பவுண்டரிகளை என்​னால் விளாச முடி​யும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​யின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரி​வித்​தார்.

ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் ராஜஸ்தான் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது. ராஜஸ்​தான் அணி​யின் இளம் அதிரடி வீர​ரான வைபவ் சூர்​ய​வன்​ஷி, 38 பந்​துகளில் 10 சிக்​ஸர், 7 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​களைக் குவித்து அணிக்கு வெற்றி தேடித்தந்​தார்.

தனது பேட்​டிங் குறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: போட்​டி​யின் தொடக்​கத்​தில் நான் மெது​வாகவே விளையாடினேன். அவசரம் காட்​டு​வதை விட, எனது இன்னிங்ஸின் வேகத்தை முறைப்​படுத்​து​வ​தி​லும், ஆடு​களத்​தின் தன்​மையை உற்​று​நோக்​கு​வ​தி​லும், மறு​முனை​யில் ஆடும் தனது சக வீரருக்​குத் துணை​யாக நீண்ட நேரம் பேட்​டிங் செய்​வ​தி​லும் என்​னுடைய கவனம் இருந்​தது அது​தான் எனது மனநிலை​யாக​வும் இருந்​தது.

எப்​போது வேண்​டு​மா​னாலும் இரண்டு அல்​லது மூன்று பவுண்டரிகள் அல்​லது சிக்​ஸர்​களை என்​னால் விளாச முடி​யும் என்று எனக்​குத் தெரி​யும். எனவே, நான் சற்று கூடு​தல் நேரம் எடுத்துக்​கொண்​டு, அதிக அவசரம் காட்​டா​மல், ஆட்​டத்தை இறுதிவரை கொண்டு செல்ல முயற்சி செய்​தேன். நாங்​கள் பந்​து​வீசியபோது நான் களத்​துக்கு வெளியே அமர்ந்​திருந்​தேன்.

அப்​போது ஆடு​களம் பேட்​டிங்​குக்கு மிக​வும் சாதக​மாக இருப்​பது தெரிந்​தது. அதைக் கண்​டதும், இன்று ஆட்​டத்​தின் தொடக்கத்திலேயே நான் அதிக அவசரம் காட்​டக்​கூ​டாது. சற்றுநேரம் எடுத்​துக்​கொள்ள வேண்​டும். நீண்ட நேரம் நான் பேட்டிங் செய்​தால், அது மறு​முனை​யில் ஆடும் பேட்​ஸ்​மேனுக்​கும் உதவி​யாக இருக்கும் என்று நினைத்​தேன்.

அதைத்​தான் நான் களத்​தில் செயல்​படுத்​தினேன். இந்த வெற்றிக்கு ராஜஸ்​தான் வீரர்​கள் அனை​வரும் கடின​மாக உழைத்தனர். அனைவரும் ஆட்​டத்​தில் தங்​களை முழு​மை​யாக ஈடு​படுத்​திக்​கொண்டு முழு​மை​யான திறனை களத்​தில் வெளிப்படுத்​தினர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here