கள்ளக்குறிச்சியில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, தரைப்பாலம் உடைந்தது

0
22

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் மாலை பெய்யத் தொடங்கிய கனமழையானது, இரவு முழு வதும் விடிய விடிய பெய்தது. இதனால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட பகுதிகளில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் விடிய விடிய பெய்த கனமழையால் சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தில் இருந்து கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகேவுள்ள மாங்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஓடை உடைந்து மழைநீர் பெருக் கெடுத்து ஓடியதால் தரைப்பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தினமும் பயன்படுத்தக்கூடிய அன்றாட பொருட்களை வாங்க கூட 15 கி.மீட்டர் சுற்றிச் செல்ல வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகா வூர் கிராமத்தில் உள்ள குருத் தங்குளம் நிரம்பியதால் வெள்ள நீர் சாலைகளில் பெருக்கெடுத்து 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக் குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் வீடுகளில் வைத்திருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் பொது மக்களே இரவு முழுவதும் ஈடுபட்டனர்.தகவலறிந்து நேற்று காலை விருகாவூருக்கு சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் துரை முருகன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

விருகாவூரில் அதிகபட்சமாக 21 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று சின்னசேலம் கோமுகி அணைப் பகுதியில் 11 செ.மீட்டரும், ரிஷிவந்தியம் மற்றும் கலையநல்லூரில் தலா 20 செ.மீட்டரும், மாடம்பூண்டி, திருக்கோவி லூரில் தலா 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் பொரசக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று பெய்த கனமழையினால் ஏரி நிரம்பி ஓடை வழியாக உபரிநீர் வெளியேறி வருவதால் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் கடந்த பல மாதங்களாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே கல்வராயன்மலையில் உள்ள பாச்சேரி, தொரடிப்பட்டு, இன்னாடு, வெள்ளிமலை ஆகிய பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்துகன மழை பெய்து வரும் நிலையில், தற்போது பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ கூடாது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here