ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இருதய பரிசோதனை

0
510

நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 0-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு இதயநோய் கண்டறிதல் முகாம் நேற்று நடந்தது. முகாமை கல்லூரி முதல்வர் ராமலெட்சுமி தொடங்கிவைத்து பேசினார். அதன்பிறகு நடந்த முகாமில் 41 குழந்தைகளுக்கு இதய பரிசோதனை செய்யப்பட்டது. இதய நோய்களான அறிகுறிகள் உள்ள குழந்தைகளும் அழைத்து வரப்பட்டனர். அந்த வகையில் இதய நோய் அறிகுறி உடைய 10 குழந்தைகளுக்கு சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் முதல்வர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. 

முகாமில் மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசிங், உறைவிட மருத்துவர் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள், குழந்தைகள் நலத்துறை தலைவர் அருள்பிரசாத், டாக்டர்கள் பகவதிபெருமாள், சத்யாதித்யா, ரம்யா ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசோதனை செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here