ஹிமந்த பிஸ்வா சர்மா ராஜினாமா: அசாமில் மே 12-ம் தேதி புதிய அரசின் பதவியேற்பு விழா

0
20

அ​சாம் பேர​வைத் தேர்​தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 102 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. இதன்​ மூலம் தொடர்ந்து 3-வது முறை​யாக இக்​கூட்​டணி ஆட்​சியை தக்கவைத்துக் கொண்​டது.

இதனிடையே, மத்​திய அமைச்​சர் ஜே.பி. நட்டா மற்​றும் ஹரியானா முதல்​வர் நயாப் சிங் சைனி ஆகியோர் அசாம் மாநிலத்​துக்​கான மத்​தி​யப் பார்​வை​யாளர்​களாக நியமிக்கப்பட்டுள்​ளனர். ஓரிரு நாளில் பாஜக​வின் மத்​தி​யப் பார்வை​யாளர்​கள் குவாஹாட்​டிக்கு வரு​வார்​கள் என்​றும், அதன் பிறகு புதி​தாகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​.எல்​.ஏ-க்​கள் அடுத்த முதல்​வரை தேர்ந்​தெடுப்​பார்​கள் என்​றும் தகவல்​கள் தெரிவிக்கின்​றன.

எனினும், ஹிமந்த பிஸ்வா சர்​மாவே மீண்​டும் முதல்​வ​ராகத் தேர்ந்​தெடுக்​கப்பட அதிக வாய்ப்​புள்​ள​தாக மாநில பாஜக வட்டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. புதிய அரசு பதவி​யேற்பு விழா மே 12ம் தேதி நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆளுநர் லட்​சுமண் பிர​சாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜி​னாமா கடிதத்தை நேற்று சமர்ப்பித்தார். புதிய முதல்​வர் மற்​றும் அமைச்​சரவை நியமிக்கப்படும் வரை தற்​காலிக​மாக பதவி​யில் தொடருமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here