Home தேசிய செய்திகள் கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை – நடந்தது என்ன?

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை – நடந்தது என்ன?

0

 சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்​கில் கேரள முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது.

கடந்த மாதம் நடை​பெற்ற கேரள சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி வெற்றி பெற்​றதை தொடர்ந்​து, மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் பின​ராயி விஜயன் சமீபத்​தில் ஆட்​சியை இழந்​தார். இதையடுத்து அவர் கேரள சட்​டப் பேர​வை​யின் எதிர்க்​கட்சி தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார்.

பின​ராயி விஜயனின் மகளும் முன்​னாள் தகவல் தொழில்​நுட்ப ஆலோ​சகரு​மான டி.வீணா, எக்​ஸாலாஜிக் என்ற கன்​சல்​டன்சி நிறு​வனத்தை நடத்தி வந்​தார். தற்​போது செயல்​பாட்​டில் இல்​லாத அந்த நிறு​வனம் கடந்த 2018 மற்​றும் 2019-ல் எந்​தவொரு சேவையும் வழங்​காமல் சிஎம்​ஆர்​எல் என்ற கனிம நிறுவனத்திடமிருந்து ரூ.1.72 கோடி பெற்​ற​தாக புகார் எழுந்​தது. இந்​தப் பணப்​பரிவர்த்​தனை தொடர்​பாக கடந்த 2024-ல் அமலாக்கத் துறை வழக்​குப் பதிவு செய்தது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் திரு​வனந்​த​புரத்​தில் பின​ராயி விஜயன் தற்​போது வசிக்​கும் வீடு, கண்​ணூரில் உள்ள சொந்த வீடு, கோழிக்​கோட்​டில் உள்ள அவரது மரு​மக​னும் முன்​னாள் அமைச்சரு​மான முகம்​மது ரியாஸ் வீடு உட்பட மாநிலம் முழுவதும் 10 இடங்​களில் அமலாக்​கத் துறை நேற்று சோதனை நடத்​தி​யது. இந்த வழக்​கில் அமலாக்​கத் துறை நடவடிக்​கையை ரத்து செய்​யக் கோரி சிஎம்​ஆர்​எல் தாக்​கல் செய்த மனுவை கேரள உயர் நீதி​மன்​றம் நேற்று முன்​தினம் தள்​ளு​படி செய்த நிலை​யில் இந்த சோதனை நடந்​தது.

பழிவாங்கும் நடவடிக்கை

திரு​வனந்​த​புரத்​தில் நேற்று சோதனை நடந்த இடத்​துக்கு வந்த மார்க்​சிஸ்ட் எம்​.பி. ஜான் பிரிட்​டாஸ் கூறுகை​யில், “இது அரசி​யல் பழி​வாங்​கும் நடவடிக்​கை. இந்த விவ​காரத்​தில் பாஜக​வும் காங்கிரஸும் அரசி​யல் ரீதி​யாக இணைந்து செயல்​படு​கின்​றன. கேரள தேர்​தல் பிரச்​சா​ரத்​தின்போது பின​ராயி விஜயனுக்கு எதிராக அமலாக்​கத்​துறை ஏன் நடவடிக்கை எடுக்​க​வில்லை என்று காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி கேள்வி எழுப்​பி​னார்.

ஆனால் தற்​போது அதே மத்​திய முகமை அரசி​யல் கரு​வி​யாக பயன்​படுத்​தப்​படு​வதன் மூலம் காங்​கிரஸ் பயனடைகிறது. எக்ஸாலாஜிக் நிறு​வனத்​துடன் பரிவர்த்​தனை​களில் ஈடு​பட்ட நிறுவனம், தற்​போதைய 2 அமைச்​சர்​கள் உட்பட காங்​கிரஸ் தலை​வர்​களுக்கு நேரடிப் பணம் வழங்​கி​யுள்​ளது. அந்​தப் பணப்பரிவர்த்​தனை​கள் குறித்து அமலாக்​கத்​துறை விசா​ரணை நடத்​த​வில்​லை” என்​றார்.

அரசி​யல் உள்​நோக்​கம்

இந்த சோதனை அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எம்​.ஏ. பேபி குற்​றம் சாட்​டி​னார். அதேவேளை​யில் மாநில பாஜக துணைத் தலை​வர் ஷான் ஜார்ஜ் கூறுகை​யில், “எஸ்​எப்ஐஓ (கடும் முறைகேடு புல​னாய்வு அலு​வல​கம்) மேற்​கொண்ட விசாரணையில் வீணா விஜயன் மூன்​றாவது குற்​ற​வாளி​யாக சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அவருடன் தொடர்​புடைய​வர்​களின் வெளிநாட்டு வங்​கிக் கணக்​கு​கள் குறித்​தும் விசா​ரணை நடத்தப்பட வேண்​டும்.

இந்த வழக்கு இறு​தி​யில் பின​ராயி விஜயனை சென்​றடை​யும். விஜயனும் அவரது மகளும் கைது மற்​றும் சிறை தண்​டனையை எதிர்​கொள்ள நேரிடும். விஜயன் மட்​டுமின்றி பல அரசி​யல் தலைவர்​கள் பணம் பெற்​றுள்​ளனர். இதில் தொடர்புடையவர்களின் பெயர்​கள் வெளி​யா​வதை தடுக்க முயற்சிகள் நடக்​கின்​றன” என்​றார்.

கார் கண்​ணாடிகள் உடைப்பு

திரு​வனந்​த​புரத்​தில் நேற்று அதி​காலை​யில் சோதனை தொடங்கிய​தில் இருந்து பின​ராயி விஜயனும் அவரது குடும்பத்தினரும் வீட்​டுக்​குள்​ளேயே இருந்​தனர். அதேநேரம் நூற்றுக்​கணக்​கான மார்க்​சிஸ்ட் தொண்​டர்​கள் வெளியே திரண்டு அமலாக்​கத் துறைக்கு எதி​ராக போராட்​டத்​தில் ஈடுபட்டனர். அப்​போது அதி​காரி​கள் சென்ற ஒரு வாக​னத்தை தொண்​டர்​கள் வழிமறித்து அமலாக்​கத் துறைக்கு எதி​ராக முழக்கமிட்​டனர். அப்​போது கார் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தில் முகப்பு கண்​ணாடி சேதம் அடைந்​தது.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட சிலர் அங்​கிருந்த பாது​காப்பு பணியாளர்​கள் மீது பிளாஸ்​டிக் பாட்​டில்​கள், ஹெல்​மெட்​டு​கள் மற்​றும் கற்​களை வீசி​ய​தாக கூறப்​படு​கிறது. உடனே கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் தலை​யிட்​டு, தொண்​டர்​களை அமைதிப்படுத்தி, வன்​முறையை கைவிடு​மாறு கேட்​டுக்​கொண்டனர். மேலும் திரு​வனந்​த​புரத்​தில் காலை​யி​லிருந்து போராட்​டங்​களும் அதற்கு எதி​ராக போலீஸ் நடவடிக்​கைகளும் பல மணி நேரம் நீடித்​தன. நிலை​மையை கட்​டுக்​குள் கொண்​டு வர மாநில போலீ​ஸார் கடுமை​யாகப்​ ​போ​ராடினர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version