Home தேசிய செய்திகள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ – பிரதமர் மோடியின் ட்வீட்டும் பின்னணியும்

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ – பிரதமர் மோடியின் ட்வீட்டும் பின்னணியும்

0

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கார்த்திகை திருநாளான நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மதுரை ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், மதுரை காவல் ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரியும், காலம் கடந்தாலும் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட கோரி ராம ரவிக்குமார், ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் கூறியதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவை கலைத்த உச்ச நீதிமன்றம், மலையை சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவும், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை இன்று ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று நேற்று இரவு ட்வீட் செய்திருந்தார். அதில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழியில் அவர் பதிவிட்டிருந்தார். அவர் ட்வீட் செய்த நேரத்தை வைத்து பார்த்தால் இதன் பின்னணியில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் இருக்கலாம் என கருதும் வகையில் அமைந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version