பாகிஸ்தான் சதியில் சிக்காமல் இருக்க தெரியாத செல்போன் அழைப்பை ஏற்க வேண்டாம்: ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

0
10

பாகிஸ்தான் உளவு அமைப்​பின் சதி​யில் சிக்​காமல் இருக்க, தெரியாத செல்​போன் எண்​களி​லிருந்து வரும் அழைப்​பு​களை ஏற்க வேண்​டாம் என்று ஜம்மு-காஷ்​மீர் மக்​களுக்கு போலீஸார் எச்​சரிக்கை விடுத்​துள்​ளனர். இது​குறித்து ஜம்​முவில் போலீஸ் ஐ.ஜி. (ஜம்மு மண்​டலம்) தேஜிந்​தர் சிங் கூறிய​தாவது:

பாகிஸ்தான் உளவு அமைப்​பு​களைச் சேர்ந்​தவர்​கள் இந்​தி​யாவில் ஊடுருவி தகவல்​களை சேகரிக்க முயன்று வரு​கின்​றனர். குறிப்பாக, இந்​தி​யாவில் உள்​ளவர்​களிடம் நெருக்​க​மாக பழகி​யும், பாலியல் ரீதி​யான உறவு​களை ஏற்​படுத்​தி​யும் முக்​கிய​மான தகவல்​களைப் பெற அவர்​கள் முயன்று வரு​கின்​றனர். எனவே, பொது​மக்​கள் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

தெரியாத எண்​களி​லிருந்து வரும் செல்​போன் அழைப்​பு​களை ஏற்க வேண்​டாம். அந்த நபர் தெரிந்​தவர் என்​றால் மட்​டுமே நீங்கள் பேச வேண்​டும். அறி​முகமில்​லாத நபர்​கள் மிகச் சிறிய தகவல்​களைக் கேட்​டால் கூட, அவற்​றைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளி​நாட்டு எண்​களி​லிருந்து அழைப்​பு​கள் வந்தால், அரு​கிலுள்ள காவல் நிலை​யத்​துக்கு தகவல் தெரி​விக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here