எஸ்பிஐ வங்கியின் 3,897 வாடிக்கையாளர்​களின் தரவுகள் கசிவு: சைபர் பாதுகாப்பு முகமை விசாரணைக்கு உத்​தரவு

0
11

பாரத ஸ்டேட் வங்கி​யின் (எஸ்பிஐ) தரவுத் தொகுப்​பிலிருந்து 3,897 வாடிக்​கை​யாளர்​களின் தகவல்​கள் கசிந்​தது தொடர்​பாக விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

நாட்​டின் மிகப்​பெரிய பொதுத்​துறை வங்​கி​யான எஸ்​பிஐ, அக்​டோபர் 21 அன்று பங்​குச் சந்​தைகளில் தாக்​கல் செய்த அறிக்​கை​யில் டார்க் வெப்​பில் கிடைக்​கப்​பெற்ற சுமார் 3.75 லட்​சம் பதிவு​களை முதற்​கட்​ட​மாக பரிசீலித்​த​தில், தனிப்​பட்ட நபர்​களை அடை​யாளம் காணக்​கூடிய விவரங்​களைக் கொண்ட 3,897 பதிவு​கள் கண்​டறியப்​பட்​ட​தாகத் தெரி​வித்​துள்​ளது.

கசிந்த தகவல்​களில் எஸ்​பிஐ வாடிக்​கை​யாளர்​களின் பெயர், பாலினம், பதிவு செய்​யப்​பட்ட செல்போன் எண்​கள், பிறந்த தேதி, மின்​னஞ்​சல் முகவரி​கள் மற்​றும் வீட்டு முகவரி​கள் அடங்​கும்.

மேலும், வங்​கிக் கிளை மற்​றும் வாடிக்​கை​யாளர் தகவல் கோப்பு (சிஐஎப்) எண்​கள், கடன் தொடர்​பு​களுக்​கான லீடு ஐடி-கள் மற்​றும் கடன் பதிவு​கள் சார்ந்த பிற விவரங்​களும் அதில் இடம்​பெற்​றுள்​ளன. இதையடுத்​து, அங்​கீகரிக்​கப்​பட்ட ஒரு சுயாதீன சைபர் பாது​காப்பு முகமையை விசா​ரணைக்​காக நியமித்​துள்​ளோம் என்று எஸ்​பிஐ தெரி​வித்​துள்​ளது.

மேலும், இந்த சம்​பவத்​தால் வங்​கி​யின் வணி​க, நிதிச் செயல்​பாடுகளுக்கு எந்​த பாதிப்​பும் இல்லை், வங்​கி​யின் சேவை​கள் தடங்​கலின்றி வழக்​கம்​போல இயங்கி வரு​கின்றன என்​றும் உறு​தி​யளித்​துள்​ளது. இருப்​பினும், இதுகுறித்த விசா​ரணை இன்​னும் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. கசி​வின் எல்​லை​யைத் தீர்​மானிக்​க​ விரி​வான மதிப்​பீடு தேவைப்​படு​வ​தாக எஸ்​பிஐ தெரி​வித்​துள்​ளது.

எஸ்​பிஐ-​யின் முதற்​கட்ட விசா​ரணை​யில் தனிப்​பட்ட விவரங்​களும் கடன் தொடர்​பான தரவு​களுமே கண்​டறியப்​பட்​டுள்​ளன. பாதிக்​கப்​பட்ட ஒவ்​வொரு வாடிக்​கை​யாளரின் கணக்கு கடவுச்​சொற்​கள், பின் எண்​கள் அல்​லது பரிவர்த்​தனை விவரங்​கள் திருடப்​பட்​ட​தாகத் தகவல்​கள் எது​வும் உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை. வாடிக்​கை​யாளர்​கள் தங்​கள் கணக்​கு​கள் ஹேக் செய்​யப்​பட்​டு​விட்​ட​தாக அச்​சப்​படத் தேவை​யில்​லை​ என்​று எஸ்​பிஐ தெரி​வித்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here